Saturday, 10 July 2010

உன் பிறந்தநாள்……………….

உன் பிறந்தநாள்……………….
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
உன் பிறந்தநாளன்று முதல்ஆளாய் 12 மணிக்கே
வாழ்த்தமுடியவில்லையென வருத்தம்

நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை, நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவேன்

தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!

பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் பிறந்தநாள் ஆடை போல் வருமா?

ஒருமுறைதான் பிறந்தாய் நீ
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!

உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?

உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!

நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!

உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!

என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.

உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாயானாய்

என் செல்லமே....
நீ எல்லா சுகமும் பெற்று நீடூழி வாழ
என் வாழ்த்துக்கள்…!!!!

பிரிந்து போனது என் உயிர்

உன் விழிகளில் இனி நானில்லை
இருண்டு போனது என் உலகம்

உன் தேடலில் இனி நானில்லை
சிதைந்து போனது என் பூமி

உன் உச்சரிப்பில் இனி என் பெயரில்லை
மவுனமாகி போனது என் தேசம்

உன் மனதினில் இனி நானில்லை
உடைந்து போனது என் இதயம்

உன் கனவினில் இனி என் நிழலில்லை
தொலைந்து போனது என் இரவு

உன்னில் இனி நானில்லை
பிரிந்து போனது என் உயிர்

என் கண்களின் கண்ணீர்

என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..
எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?

என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....

ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?

கலைந்து போன கனவு

நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்!
ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்....
ஒருமுறை வந்த கனவு என்றும்
மீண்டும் வருவதில்லை!...
ஏனோ நீ மட்டும் அடிக்கடி கண்முன் தோன்றி
மனதை ரணமாக்குகிறாய்!!!

கலைந்து போனது கனவு மட்டும் என்றெண்ணினேன்
வாழ்க்கையும் தான் என்று உணர்த்தியது உன் வார்த்தைகள்!
ஏனடி என் கனவுக்குள் வந்தாய்?
இப்போது ஏனடி கலைந்து போகிறாய்..???

சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம் காதல் கொண்டு
அதில் எரிந்து போகும் விட்டில் பூச்சியாகிப் போனேன் நான்!!!!
ஏழு நாள் வாழும் பட்டாம்பூச்சிக்குக் கூட
அதன் வாழ்க்கையை ரசிக்கும் உரிமையுண்டு!
உன்னோடு ஏழு ஜென்மம் வரை வாழ ஆசைப்பட்ட எனக்கு
சிறகிழந்து தவிக்கும் இந்தத் தண்டனை எதற்காக..........??

உன்னைக் காதலித்த பாவத்திற்காக
காலம் முழுவதும் எனக்கு விதிக்கப் பட்டது
கண்ணீர் மட்டும் தானா????

இதழ்களில் புன்னகை விரியும் போதெல்லாம்
இதயம் ஏனோ வலிக்கிறது!!!

உன் நினைவுகள் என் காயத்திற்கு மருந்தா இல்லை
அமிலமா என்று தெரியவில்லை!
இருந்தாலும் அள்ளி அள்ளிப் பூசிக் கொள்கிறேன்!!!!

எத்தனையோ தடவை சொல்லியும்
புரிந்து கொள்ளாமல் விட்டுச் சென்ற
உன்னை நினைத்து வேதனைப்படுவது
முட்டாள்த் தனம் என்று தெரிகிறது!
ஆனாலும் அந்த முட்டாளத் தனத்தை
செய்யாமல் இருக்க இந்த
முட்டாளுக்குத் தெரியவில்லை!!!!

என் வேதனைகளைக் கொட்டி எழுதிய
கவிதைகளைக் கூட பொத்தி வைக்கிறேன்!
என்றாவது நீ படித்தால் எனக்காகக்
கண்ணீர் சிந்தக் கூடாது என்பதற்காக............