Wednesday, 28 July 2010

என்னவளே..(?)

என்னவளே..(?)
இதயம் சுட்டுப் போட்டவளே
எனை தனிமை நெருப்பில் எரித்தவளே
உயிரில் பிரிவுத் தீயை இட்டவளே
கொல்லாமலே எனை கொன்றவளே

காதல் காதலென கைபிடித்தழைத்தவளே
இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே
சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள்
எனை வாழும் பிணமாக்கி வைத்தவளே

வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது
என்னில் நிகழ்ந்த தவறு...
கால சுமையின் கனவுகளை எல்லாம்
நீயாய் சுமந்தது நானே செய்த தவறு

தெரிந்தே உடைக்கும் இதய தச்சன்
நீயே ஆனாயடி, உன் தெருவெல்லாம்
காதல் ஏக்கத் ‘தீ பரவி’ -
எனக்காய் நீ ஏங்கும் நேரம்
நான் இல்லாமலும் போவேனடி

காற்று வெளி மூச்சு பரவி
இதயம் தொட்டாலடி, உன் கால் கொலுசு
சப்தம் ஒரு சேதி சொன்னாலடி,
நீ பார்க்கும் பார்வையில் துளியேனும்
என் தேடலை கொண்டாலடி -
சமாதி உடைத்தேனும் உயிர்ப்பேன்

உனக்காய் மீண்டும் பிறப்பேன்
காதலால் காதலால்
உன்னில் நானாய் நிறைவேனடி!!

எப்படி மறப்பேன்..!!

நீயும் நிலவும் ஒன்று!
நிலவில் நீர் இல்லை
உன்னுள் ஈரம் இல்லை…
உண்மை இல்லை…!

தாலாட்டும் கனவுகளை
தந்துவிட்ட காதலியே...! (?)
பிரிவுத் துயரம் நீக்க..

இறந்துபோகும் வேளையிலும்
மறந்து போகாக் காதலியே...!
“இப்படிபட்ட துரோகத்தை
நீயா....செய்தாய்...?

ஓரு நாள் உனைப் பார்க்காவிடில்
ஓலமிடும் என் நெஞ்சில்
உதிப்பதெல்லாம் உன் நினைவுகள்தானடி....

உனக்காக எல்லாவற்றையும் இழந்தேன்...
நீ என்னையும் இழப்பாய்
என்பது தெரியாமல்!

புதிய உறவுகளின் பிடியில் நின்று
விலகிக் கொள்ளக் நினைக்கிறாயே...!
தனிமையின் அவஸ்தைகளை
தணிப்பதே உன் நினைவுகள் தானடி...

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்!.
ஆனால்… என் உயிர் உன்னோடு இருப்பது
யாருக்குத் தெரியும்?!

உன் விழிகள் பார்த்தால் மொழிகள் தடுமாறும்
என்னையா........? வெறுத்துப் பேசச் சொல்கிறாய்..!
மழை போல நீ... எப்போதாவதுதான் வருகிறாய்!
நிலம் போல் நான்... எப்போதும் காத்திருக்கிறேன்!

மறுத்துப் பேசவே .. மனம் கேட்கவில்லையடி..
மயிலே…!நானெப்படி உனை மறப்பேன்...?
சொன்னால் புரியவில்லை
அனுபவித்தால்தான் தெரிகிறது
காதல் தோல்வியின் வலி!

மலையின் எல்லை அடிவாரத்தில்...
கடலின் எல்லை கடற்கரையில்...
காதலின் எல்லை கல்லறையில்...!

துயிலும் பொழுதும் தூக்கத்தில் அணைக்கும்
உன் காதல் நினைவுகளையா...?
தூக்கி எறியச் சொன்னாய்..!

உன் காலடிச் சுவடுபட்ட மண்ணை சேகரித்து
வைக்கிறேன், அதனால் மட்டுமே
என் கல்லறைச் சுவரை எழுப்பட்டும்…
உன் விழிகளில் தொடங்கிய என் காதல்
உன் பாதங்களிலேயே முடியட்டும்.