Wednesday, 28 July 2010

என்னவளே..(?)

என்னவளே..(?)
இதயம் சுட்டுப் போட்டவளே
எனை தனிமை நெருப்பில் எரித்தவளே
உயிரில் பிரிவுத் தீயை இட்டவளே
கொல்லாமலே எனை கொன்றவளே

காதல் காதலென கைபிடித்தழைத்தவளே
இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே
சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள்
எனை வாழும் பிணமாக்கி வைத்தவளே

வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது
என்னில் நிகழ்ந்த தவறு...
கால சுமையின் கனவுகளை எல்லாம்
நீயாய் சுமந்தது நானே செய்த தவறு

தெரிந்தே உடைக்கும் இதய தச்சன்
நீயே ஆனாயடி, உன் தெருவெல்லாம்
காதல் ஏக்கத் ‘தீ பரவி’ -
எனக்காய் நீ ஏங்கும் நேரம்
நான் இல்லாமலும் போவேனடி

காற்று வெளி மூச்சு பரவி
இதயம் தொட்டாலடி, உன் கால் கொலுசு
சப்தம் ஒரு சேதி சொன்னாலடி,
நீ பார்க்கும் பார்வையில் துளியேனும்
என் தேடலை கொண்டாலடி -
சமாதி உடைத்தேனும் உயிர்ப்பேன்

உனக்காய் மீண்டும் பிறப்பேன்
காதலால் காதலால்
உன்னில் நானாய் நிறைவேனடி!!

No comments:

Post a Comment