Thursday, 23 June 2011

என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!!


தனிமை என்பது நேற்றானது
உன் வருகை என்பது இன்றானது
இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான்
இதை வரமாய் தந்த, நாள் இன்று தான்
என் தேவதை உனை எனக்கு தந்த
என் தேவன் அவனுக்கு முதல் நன்றி
உயிர் நீ இன்று உதித்ததனால்
என் மெய் என்பதிங்கு உலவுதடி
என்னுள் துடிக்கும் ஓர் உயிராய்
என்றும் இருக்கும் கண்மணியே..
புது அழகிய மலரே நீ என்றும்
புன்னகை பூத்து குலுங்க என் வாழ்த்து
என் காலம் என்பது முடியும் வரை
உன்னை கண்ணுள் வைத்து காத்திருப்பேன்.
இந்த கன்னித் தமிழால் என்னவளுக்கு
உன் காதலன் எழுதும் வாழ்த்து மடல்
சின்னக் கவிதை உனை வாழ்த்த
இந்த ஒரு ஜென்மம் எனக்கு போதாதடி
என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!!


தேவதையின் பிறந்தநாள்


இன்றைய வானிலை நிலவரம்
பார்த்தாயா இன்று தென்றல் வீசுமாம்

இன்றைய நாளை பார்த்து மற்ற
364 நாட்களுக்கும் பொறாமை

பூக்கள் எல்லாம் தவம் கிடக்கின்றன
இன்று எப்படியாவது உன் கூந்தலில்
சூடி விடப்பட வேண்டும் என்று

உன் வீட்டு கண்ணாடி இன்று தன்னை
அழகு படுத்தி கொள்கிறது
அழகியான நீ இன்று பேரழகியாய்
அதன் முன்பு நிற்க்கையில்
உடைந்து விடாமல் இருக்க ..

இன்று நீ உடுத்தப்போகும் உடை
பெட்டியில் உள்ள மற்ற உடைகளை
பார்த்து கேலி செய்கிறது…..

இன்று நீ நடக்கப்போடும் பாதை
தனக்கு தானே அழகு வர்ணம்
புசிக்கொள்கிறது உன்னை வரவேற்க..

இன்று நீ பயணம் செய்யும் பேருந்துக்கு
ராஜ மரியாதையை தான் மற்ற
பேருந்துகள் மத்தியில்

நேற்றே அரசு அறிவித்து விட்டது
இன்று உன் வசிகரிக்கும் கண்களை
பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று

தேவதைகள் எல்லாம் ஒன்றாக கூடி
ஒருமனதாக முடிவு எடுத்து
விட்டார்கள் இன்று தேவதைகள்
தினமாக கொண்டாட

எனக்கு இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது
உன் பிறந்த நாள் அன்று தேவதை நீ
இவ்வளவு மாற்றத்தை எற்படுத்தும் போது
நீ பிறந்த அன்று எவ்வளவு மாற்றத்தை
எற்படுத்தி இருப்பாய்.

நியாயப்படி அதிக பிறந்த நாள் கொண்டாடினது
நானாக தான் இருக்க வேண்டும் ..
ஏனென்றால் உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நாளும் நான் தானே
புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறேன்