Wednesday, 7 July 2010

துரோகம்

தூக்கம் என் கண்களை தழுவுகிறது , ஆனால்
தூங்கினால் நீ என் கனவில் வருவாயே !
உன்னை கனவில் கூட காணவேண்டாம் என்றுதான் ,
கண்களை மூடாமலே கழிகிறது என் இரவு !
ஆனால் இருளில் கூட என் முன் தோன்றி ,
அழவைக்கிறது உன் கண்களும் அதில் தெரியும் துரோகமும்

என்ன தவறு நான் செய்தேன்

உன்னை என் உயிர் காற்றாக
சுவாசித்தேன் -நீயோ
என் கையில் அடங்க மறுத்த
வெறும் காற்றைப் போல்
என்னை கடந்து சென்றாய்

உனக்குள் ஒளிந்திருந்து நிறம்மாறிய
உன் மனதை நினைத்து
இன்றும் வியக்குகிறேன்

நம் வசந்த காலத்தை முற்றிலும்
இலையுதிர்க்காலமாய் செய்துவிட்டாய்
உன்னில் பத்திரப்படுத்திய
என் நினைவுகளை வெறும் நினைவுச்
சின்னங்களாக மாற்றிவிட்டாய்

என் நிஜங்கள்.. என் கனவுகள்
அனைத்தையும் வெறும் நிழலாக
மாற்றிச்சென்றுவிட்டாய்

நம் நினைவாக நீ எனக்களித்த
தனிமை பரிசுடன் நீ என்னை விட்டு சென்ற
அதே இடத்தில் நான் இன்றும்
நின்றுகொண்டிருக்கிறேன்

என் உயிரினும் மேலாக உன்னை
நினைத்ததை தவிர வேறு என்ன
தவறு நான் செய்தேன்..?

என் உயிரைக் கூட
பிரிந்தாலும் பிரிவேன்
என்றும் உனை நீங்க மட்டும்
மறுப்பேன்- மறப்பேன்

காதல் துரோகம்

விழியில் விழுந்தாய் இதயம் நுழைந்தாய்
ஆனால்…..
உயிரில் கலக்கும் முன் நழுவிச் சென்றாய்…
உனக்கு நான் எனக்கு நீ என்ற வார்த்தைகளை
வாய்மொழியோடு மட்டும் விட்டுச் சென்றாய்…

கண்களில் காந்தத்தை வைத்து
பெண்களை படைத்த இறைவனே!
ஆண்களை மட்டும் ஏன்
தூண்டில் மீன்களாய் படைத்து விட்டாய்!

தேனொழுகும் வார்த்தைகளில்
தேக்கு மர இதயமும்
மெழுகைப் போல் இளகிவிடும்…
கரும்பாய் இனித்திடும் காதல் மொழிகளில்
இரும்பு இதயமும் துரும்பாய் போய்விடும்…

காதலைப் படைத்த இறைவன்
ஓர் கருவியையும் படைத்திருந்தால்
கண்டுபிடித்து விடலாம்
கலப்படமில்லா காதலை…

நினைவை கனவாக்கி நிஜத்தை நிழலாக்கி
சுகத்தை எடுத்துக் கொண்டு
சோகத்தை விட்டுச் சென்றவளே…

நீ செய்த துரோகம் உன் காதலனுக்கல்ல,
புனிதமான காதலுக்கு!

நீ இல்லாத என் நாட்கள்

இமை பொழுது மட்டுமே
உன்னை மறக்க நினைத்தால்
கோடி முறை உதிக்கிறாய் என்னில்

உன்னை பிரிய நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஓர் உயிர் பிரியும் வலி என்னில்

உன் ஒரு நொடி மௌனத்தைக் கூட
என்னால் தாங்க முடியவில்லை
இனி நீ இல்லாத என் நாட்களை
எப்படி என் இதயம் தாங்கும்?

உன் தொலைவினில் நான் இருந்தாலும்
என் அருகினில்தான் நீ என்றும்

என் இதயம் வலிக்கிறதே

நிஜமென்று வாழ்ந்த நம் உறவு
இன்று வெறும் கனவாகிக்
கலைந்த போதும்
உன் நினைவுகளை என் மனதில்
நிறைத்தே வைத்திருக்கிறேன்

உன் நினைவுகளை என் மனதினில்
விதைத்து விட்டு மறந்து விடு என்றாய்
நான் எப்படி மறப்பேன் ?

என் திசை எங்கும் தெரிவதெல்லாம்
உந்தன் முகம்தான்
வந்துவிடு என்று சொல்லிவிட்டு
உன் மனக் கதவை பூட்டிக் கொண்டாய்

நாம் மகிழ்ந்து பேசிய நம் நிமிடங்களை
பறித்து சென்றாய்
எனக்குள் கனவுகள் அனைத்தையும்
வளர்த்து விட்டு எனை ஏன் மறந்தாய்?

உன் உயிரை என்னிடம் தந்துவிட்டு
ஏன் என் பிரிவை கேட்டாய்?
நான் என்ன சொல்வேன்... என்ன செய்வேன்?
என் இதயம் வலிக்கிறதே..!!!

பிரிந்து போனது என் உயிர்

உன் விழிகளில் இனி நானில்லை
இருண்டு போனது என் உலகம்

உன் தேடலில் இனி நானில்லை
சிதைந்து போனது என் பூமி

உன் உச்சரிப்பில் இனி என் பெயரில்லை
மவுனமாகி போனது என் தேசம்

உன் மனதினில் இனி நானில்லை
உடைந்து போனது என் இதயம்

உன் கனவினில் இனி என் நிழலில்லை
தொலைந்து போனது என் இரவு

உன்னில் இனி நானில்லை
பிரிந்து போனது என் உயிர்

என் மனதின் வலி

உன்னை என் மனதில்
மறைத்து வைத்திருந்தேன்
நீயோ – என் மனதை
சிதைத்து வெளியேறி விட்டாய்

என் இதயத்தை மட்டுமே சுமந்த
உன் மனம் எப்படி இன்னொரு
இதயத்தை சுமக்க முன்வந்தது?

உன் மனதின் இந்த கொடூரத்தை
என்னால் தாங்க முடியவில்லையே
என் மனதின் வலியை நீ
உணரவேயில்லை

நொடிக்கொருமுறை உன் நினைவுகளால்
என் நினைவை இழந்து வருகிறேன்
என்னால் எப்படி உன்னை
மறக்க முடியும்?

இறைவா என் எதிரிக்கும்
வேண்டாம் இப்படி ஒரு வேதனை..!!!

என் தவிப்புகள்

இன்றும் என் காதோரம்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
இறுதியாக என்னுடன் –
நீ பேசிய அந்த கனத்த மவுனம்

பேச வார்த்தைகள் இருந்தும்
பேசமுடியாமல் பிரிந்து சென்றாயே!
என் நினைவில் மறக்க முடியாமல்
பதிந்து விட்டாய்

உன்னில் தொலைந்த நம் நினைவுகள்
இன்றும் என்னுள் கரைபுரண்டோடுகிறது
என்னுயிரில் இருந்துகொண்டே
உன்னை மாற்றினாய் என்னை ஏமாற்றினாய்

நம் நினைவுகள் அனைத்தையும்
கவிதைகளாக வரைகிறேன்
கண்ணீரில் மிதக்கிறேன்

உன்னை மறக்க முடியாமல்
தேடும் என் மனதோடு
உன் நினைவில் உயிர் தவிக்கிறேன்
என் தவிப்புகள் உனக்குபுரியாமல் போனது
என் துயரமே…!!!

இறந்து கொண்டு இருக்கிறேன்

இன்றும் என் நினைவாய்
என்னிடம் நீயேதான் நிறைந்திருக்கிறாய்!
உன்னை மட்டும்தானே நேசித்தேன்
உன் அன்பில்தானே என் சுயத்தை இழந்தேன்

இருந்தும் என்னை தவிக்க விட்டு
உன்னை மட்டும் பிரித்து சென்று விட்டாயே!
மறக்க முடியவில்லை
உன்னை மறக்கவும் முயல்வதில்லை

பிரிவின் கொடுமையை
நீ பிரிந்தபோது புரிந்துகொண்டேன்
மரண நிமிடங்களின் வலியை
என் தனிமையில் உணர்ந்து கொண்டேன்

உன்னை நினைக்கும்
என் ஒவ்வொரு நொடியிலும்
நான் இருந்தும் இறந்து கொண்டு இருக்கிறேன்

யார் தவறு..?

இறப்போம் என்று தெரியாமல்
பிறந்துவிட்டோம்-
அது நம் தவறல்ல
இறந்திடுவோம் என்று தெரிந்தும்
பெற்றுவிட்டார்கள் அது
அவர்களின் தவறும் இல்லை

அதுபோல்தான்....
நீ மறுப்பாய் என்று தெரியாமல்
காதலித்துவிட்டேன்-
அது உன் தவறல்ல
நீ மறுக்கிறாய் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் -இதில்
என் தவறும் இல்லை
எல்லாம் காதலின் தவறு மட்டுமே?

காதல் சின்னம்…

அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில் அமர்ந்து அழு….
உன்னால் நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில் முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
என் காதலின் சின்னமாக…..

நீ இல்லாத உலகத்தில்

நீ இல்லாமல் வாழத்தெரியாத நான்
நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன்.
சொல் கண்ணே சொல்

நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய்
வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில்
நான் கல்லறையாய் வாழலாம்.

உனக்கான என் காதல் மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும் மழையாலும்
உன் நினைவெனும் புயலாலும்.

நீ என்னை வாழ வைக்க வேண்டாம்
வாழ விடாமல் வைத்துவிடு அது போதும்

உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்தேன்
என்பதே என் வாக்குமுலமாய் இருகட்டும்......
வா அன்பே வா

இப்படி உருமாருகிறாய்

சந்தித்தாய்... சாய்ந்தாய்... சிரித்தாய் ....
அழைத்தாய்... அன்பு கொடுத்தாய்
அலட்சியம் செய்தாய் ...

பழகினாய்... பரவசமடைந்தாய்
பதற செய்தாய்... உதவினாய்.....
உயர்த்தினாய்… உதாசினப்படுத்தினாய் ....
கண்களால் காதலாய் காயப்படுத்தினாய் ...

ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனாக்கி
என்னை அனுமனாக்கினாயோ....

தேXXயாளே...

உன் தாயின் முலைகள்
உனக்கு உணவளித்ததா
இல்லை நஞ்சூட்டியதா
இப்படி உருமாருகிறாய்...
தயவு செய்து தாய்மை அடையாதே
தாயாவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் ...!

போதுமடி

போதுமடி


இனியவளே...
நீ சூடிய மலரில்
வண்டுகள் மொய்ப்பதையே
தாங்க முடியாதவன் நான்..
நீ இன்னொருவனுக்கு
இதயத்தையே கொடுத்து விட்டாயடி ..

போதுமடி...

என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட
நம் சித்திரங்கள் சித்தரிக்கும்
நம் சரித்திரத்தை
உண்மை அன்பு மதிக்கப்படும்
நாள் வரும்-அன்று
நீ புரிந்து கொள்வாய்
என் காதலை...

நம் அன்றைய நட்பை கொண்டாட
என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!!
உன் வருகைக்காக.... !

கண்ணீர்

என் இதயத்தை அறுத்துப்பார்

கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்
சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்
ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே
நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் உண்மையாகக் காதலி.

இதய வாசல் திறப்பாயா

என்னவளே ஏன் என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன் என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும் நீ வாழ்கவென
வாழ்த்திட என் உதடுகள் அசைந்தாலும்
உள்ளம் ஊமையாய் தினமும் அழுகிறதே

உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே
உறக்கம் மறந்து போனதே

இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா

ப்ரியமானவனே,

உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை….

பிரியமான தோழியாக வந்த உன்னை- இன்று
என் கண்கள் எதோ ஒரு எதிர்பார்ப்போடு பார்க்கின்றன

காரணம் கேட்காதே, எனக்கே தெரியவில்லை ஏன் என்று..
என்னை நினைத்து நானே பயம் கொள்கிறேன்
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாய் உணர்கிறேன்

வாழ்க்கை என்றால் இத்தனை விசித்திரமானதும்,
வேடிக்கையானதும்- என்று
உன்னோடு பழகிய பின்புதான் உணர்கிறேன்,

எனை ஏன் இப்படி மாற்றிவிட்டாய்?
நான் செய்த தவறுதான் என்ன?
உன்னை நேசித்தது ஏன் தவறா?
உன்னை நெருங்கி வந்தது என் தவறா?

கள்ளியே, உன்னை நான் பிரியவில்லை,
ஆனால் விலகிச்செல்கிறேன்
உன்னை காயபடுத்தவில்லை,
ஆனால் காலங்களை கடக்க வழி தேடுகிறேன்.

கேள்விகள் கேட்காதே.
காரணம்,, இப்போது நானே ஒரு
கேள்விக்குறியாகத்தான் இருக்கிறேன்

கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தால்
தோழியாக வந்து தலை கோதுகிறாய்
மறுபக்கம் ?????? வந்து மார்போடு அணைக்கிறாய்,
தவிக்கிறேன் நான்,

உணர்விற்கும், உறவுக்கும் மத்தியில் நின்று
மறுபடியும் சொல்கிறேன்
உன்னை மறக்கவில்லை நான்
உன்னோடு பேசிப்பழகிய நாட்கள்
இன்றும் என்னுள் நீங்கா நினைவுகளாக.......

நகர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன..
இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நானும் ..................

ஏன் பிரிந்தாய்