Sunday, 13 February 2011

பிரிவு


சிரிக்கக் கற்றுக்கொடுத்தாய் ..... 
அழகை ரசிக்கக் கற்றுக்கொடுத்தாய் .... 
பூக்களை நேசிக்க கற்றுக்கொடுத்தாய் .... 
கவிதை எழுத கற்றுக்கொடுத்தாய் .... 
இசையை கேட்க கற்றுக்கொடுத்தாய் .... 
பொய் சொல்லக் கற்றுக்கொடுத்தாய் ..... 
குடும்பத்தை மறக்கக் கற்றுக்கொடுத்தாய் .... 
காதல் உண்ணர்வுகளை கற்றுக்கொடுத்தாய் .... 
என்னையே மறந்து உன்னை காதலிக்கக் கற்றுக்கொடுத்தாய் .... 
ஏனடி உன்னுடைய பிரிவை தாங்கும் சக்தியை 
மட்டும் கற்றுக்கொடுக்காமல் செல்கிறாய் ...... 

அயல் நாட்டு அகதிகள்


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்.

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல் “Happy New Year”. “Happy Pongal”  என்று மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்.

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை.

தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள். நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும், உடல்நலக் குறைவிருந்தாலும் “First Class” என்று சொல்லியே பழகிப் போனவர்கள்.

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகுமுன் வாசனைத் திரவியம் வாங்க மறப்பதில்லை. எங்கள் வியர்வையின் நாற்றம் வீட்டிலுள்ளவர்கள் அறியாமல் இருக்க.

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட எலிகள் நாங்கள். நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை. ஆனால் நாங்களும் கலைத்துதான் போகிறோம்.

எண்ணைக் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக் குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்.

திறைகடலோடியும் திரவியம் தேடும் திசை மாறிய பறவைகள் நாங்கள்.

எங்களுக்கும் மாதக் கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை. உனக்கென்ன! விமானப் பயணம். வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் வெப்பத்தைவிட சற்று அதிகமாகவே சுடுகிறது.

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதமடைந்தோம். எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கிறோம்!

இப்போதுதான் புரியத் துவங்கியது... சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது. நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாலிபத்தை..! வாழ்க்கையை..!

இழப்பீடு கிடைக்காத இழப்பு இது. நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது... யாருக்காக...? எதற்காக..? ஏன்..?

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு, குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை... இப்படி காரணங்கள் ஆயிரம்.. தோரணம் போல கண் முன்னே..

நாங்கள் சுமக்கும் சிலுவை எங்களால் எங்கள் முதுகில் அறையப்பட்டவை. எங்களுக்கு தெரியும் உழைக்க கைகள் வேண்டும் என்று.

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சினுங்கள், அன்னையின் அரவணைப்பு, தந்தையின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை.. இப்படி எத்தனையோ இழந்தோம்.

எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கிறோம்? இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்பதாலா? இல்லை.. இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நம்மூர்  Rickshaw Man கூட Rich Man தான். நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்... அயல் நாட்டு அகதிகளாய்......

நான் தெரிந்துகொண்டேன்


என் முகம்  காண மறுக்கும் 
உன் விழியில் 
என் காதோடு பேச மறுக்கும் 
உன் குரலில் 
என் நினைவை நினைக்க மறுக்கும் 
உன் நினைவில் 
என் துடிப்பை உணர மறுக்கும் 
உன் மனதில் 
என்னையே மறக்க நினைக்கும் 
உன்னில் 
நான் தெரிந்துகொண்டேன் 
என்னை நீ வெறுத்து சென்றதை 
என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை