Tuesday, 20 September 2011

நான் தெரிந்துகொண்டேன்

என் முகம் காண மறுக்கும் 
உன் விழியில் 
என் காதோடு பேச மறுக்கும் 
உன் குரலில்
என் நினைவை நினைக்க மறுக்கும் 
உன் நினைவில் 

என் துடிப்பை உணர மறுக்கும் 
உன் மனதில் 
என்னையே மறக்க நினைக்கும் 
உன்னில் 
நான் தெரிந்துகொண்டேன்….. 
என்னை நீ வெறுத்து சென்றதை.. 
என் உயிரை உன்னோடு எடுத்து சென்றதை
..

பிரிவு


சிரிக்கக் கற்றுக்கொடுத்தாய் ..... 
அழகை ரசிக்கக் கற்றுக்கொடுத்தாய் .... 
பூக்களை நேசிக்க கற்றுக்கொடுத்தாய் .... 
கவிதை எழுத கற்றுக்கொடுத்தாய் .... 
இசையை கேட்க கற்றுக்கொடுத்தாய் .... 
பொய் சொல்லக் கற்றுக்கொடுத்தாய் ..... 
குடும்பத்தை மறக்கக் கற்றுக்கொடுத்தாய் .... 
காதல் உண்ணர்வுகளை கற்றுக்கொடுத்தாய் .... 
என்னையே மறந்து உன்னை

காதலிக்கக் கற்றுக்கொடுத்தாய் .... 
ஏனடி உன்னுடைய பிரிவை தாங்கும் சக்தியை 
மட்டும் கற்றுக்கொடுக்காமல் செல்கிறாய் ...... 

மறக்கத்தான் நினைக்கிறேன்


உன்னை கண்டபோது புதைந்துபோன 
நினைவுகள் எல்லாம் மலர்கிறது 
புதிய மலராய்......... 
மறக்கத்தான் நினைக்கிறேன்

கடந்து போன காலங்களை..

சிதைந்து போன வாழ்வை..

கருகி போன காதலை..

மனதில் உள்ள காயங்களை.. 
கல்லறை கண்ட நேசத்தை...

மறக்கத்தான் நினைக்கிறேன்

முடியவில்லை..............!!!!!!!!

உறையாத உன் நினைவுகளால்

நீ என்னைப் பிரிந்து போகையில் 

உறைந்து போனது என் இரத்தம் 
ஆனாலும் உறையாத உன் நினைவுகளால் 
இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது 
என் இதயம்.............