நடராஜ் காதல் கவிதைகள்
வலிகளைக் கூட வரங்களாய் நினைத்து மகிழ்கிறேன்.. இதயத்தில் உன் நினைவுகள்..
Monday, 23 August 2021
Sunday, 6 October 2019
புரியப்படாத புதிர்
எனை விட்டு பிரிவாய் என எண்ணி இருந்தால்
உன் நினைவுகள் என்னுள் வேர் விட்டு இருக்காது
காதல் துளிர்த்தும் இருக்காது
உன் பதுங்கலும் பயமுமே
என்னுள் உன்னை புதைக்க செய்கிறது
காதல் தவிர நான் யாசித்தது அதிகம்.....
என் மன சிறையில் நீ அகப்படும் வரை.
என் மௌனங்கள் கூட வெட்கி தலைகுனியும்
உன் பால் நான் காதல் கொண்ட பின்பு.
நீ பாராமல் பார்க்கும் பார்வையும்
பேசாத மௌன மொழியும் என்றுமே
என்னுள் புரியப்படாத புதிர் தான்
உன் விழிகள் அசையும் போதெல்லாம்
நான் விழித்து விடுகிறேன்
எங்கோ உன் பார்வைகள் எனை தேடுவதாய் உணர்ந்து.
உதிர்ந்த பின் இதழ் விரித்தால் என்ன விரிக்காவிட்டல் என்ன ?????
என் மனதில் நீயே வாழ்கிறாய்
கண்கள் கலங்கினாலும்
கனவுகள் கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை
உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயே வாழ்கிறாய்
ஏனோ பிரிந்த்து சென்றாய்!
காதல் தந்தாய்! சேர்ந்து நடக்க பாதை தந்தாய்!
அன்பு தந்தாய்! அன்பு தரும் வலியும் நீ தந்தாய்!
பேச வார்தைகள் நீ தந்தாய்!
ஆனால் நீயோ பேசாமல் எனைக் கொன்றாய்!
தென்றல் தரும் வாசம் தந்தாய்!
என் சுவாசத்தையும் நிறுத்தி சென்றாய்!
இயற்கை தரும் அழகு தந்தாய்!
என் இதயத் துடிப்பையும் அடக்கி சென்றாய்!
செவ்வானம் நீ தந்தாய்!
என் செங்குருதியையும் உறுகிடச் செய்தாய்!
உல்லாசம் நீ தந்தாய்!
எனதுயிரையும் பறித்து சென்றாய்!
சேர்ந்து வாழ ஆசை தந்தாய்!
ஏனோ பிரிந்த்து சென்றாய்!
உன் நினைவுகள்
நீ வேறு, நான் வேறல்ல என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு நினைத்துக் கூட பார்க்கவில்லை
நீ என்னை பிரிவாய்யென்று
என்னை நீ மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!
எதை நினைப்பேன் எதை மறப்பேன்
நான் உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி சென்று விட்டது
உன் நினைவுகள்
உன்னை மறப்பதா என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்
Subscribe to:
Posts (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...