Thursday, 15 July 2010

காரணம் சொல்...

கண்ணீர் துடைத்தவளே - இன்று
கண்ணீர் வரவழைக்கிறாள்...
அன்பைப் பொழிந்தவளே - இன்று
அமைதி காக்கிறாள்...
ஆறுதல் சொன்னவளே - இன்று
அழவும் வைக்கிறாள்...

தூக்கம் கொடுத்தவளே - இன்று
தூக்கம் கெடுக்கிறாள்...
கட்டி அணைத்தவளே - இன்று
எட்டி நிற்கிறாள்...
காதல் சொன்னவளே - இன்று
கரைந்தும் செல்கிறாள்...

பாசம் தான் காட்டினாயா - இல்லை
பாசாங்கு காட்டினாயா...
நேசம் கொண்டாயா - இல்லை
வேஷம் கொண்டாயா...

 "தோள் சாய ஒரு தோழி" - இனி
"தோள் சாய ஒரு தலையணை" ஆனது...


முதலில்,
நன்றாகத்தான் இருந்தது -
தூங்கா இரவுகள் - உன்
நினைவுகளை சுமந்தபடி...

இப்பொழுதும்,
தூங்கா இரவுகள் - உன்
நினைவுகளை சுமந்தபடி -
ஆனால், நன்றாகத்தான் இல்லை...

காதல் சொட்ட சொட்ட
கவிதை எழுதியவனை - இன்று
கண்ணீர் சொட்ட சொட்ட
எழுத வைக்கிறாய்...

காதலிக்காதே என்று சொல்லாதே -
அதற்கு பதிலாய்
கத்தி எடுத்து குத்தி விடு -
அதன் வலியே மேல்...
வார்த்தைகளால் என்னை கிழிக்காதே...

நன்றாகத் தானடி இருந்தாய் -
என்ன ஆயிற்று உனக்கு...
நேற்று இருந்த நீ -
இன்று இல்லை...
என்ன ஆயிற்று...
பதில் சொல்...

கண்கள் குளமாகிறது... - நீ
கண்மூடிச் செல்லாதே...
காரணம் சொல் - ஏனடி?
காரணம் சொல்...

No comments:

Post a Comment