நீ இல்லாமல் வாழத்தெரியாத நான்
நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன்.
சொல் கண்ணே சொல்
நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய்
வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில்
நான் கல்லறையாய் வாழலாம்.
உனக்கான என் காதல் மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும் மழையாலும்
உன் நினைவெனும் புயலாலும்.
நீ என்னை வாழ வைக்க வேண்டாம்
வாழ விடாமல் வைத்துவிடு அது போதும்
உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்தேன்
என்பதே என் வாக்குமுலமாய் இருகட்டும்......
வா அன்பே வா
Subscribe to:
Post Comments (Atom)
-
தனிமை என்பது நேற்றானது உன் வருகை என்பது இன்றானது இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான் இதை வரமாய் தந்த , நாள் இன்று தான் என் தேவதை உனை எனக்கு...
-
இமை பொழுது மட்டுமே உன்னை மறக்க நினைத்தால் கோடி முறை உதிக்கிறாய் என்னில் உன்னை பிரிய நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஓர் உயிர் பிரியும் வ...
-
நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்! ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்.... ஒருமுறை வந்த கனவு என்றும் மீண்டும் வருவதில்லை!... ஏ...
No comments:
Post a Comment