Monday, 20 December 2010

அன்பே நலமா......?

நீ அருகில் இருக்கும் போது
உன் அன்பு எனக்கு தெரியவில்லை.
நீ நெருங்கி வரும் பொழுது,
உன் பாசம் எனக்கு புரியவில்லை.
நீ கனவில் வரும் போது,
உன் காதலை நான் அறியவில்லை .

ம்.....ம் ... இழந்துவிட்டேன்..
அந்த சுகமான நாட்களை.
இப்போது தவிக்கின்றேன்
உன் அன்புக்காக, பாசத்துக்காக
நேசத்துக்காக, காதலுக்காக.

நீ தொலைவில் இருக்கிறாய் ஆனால்
உன் அன்பு எனக்கு தெரிகிறதே
நீ விலகிப் போகிறாயா ? ஆனால்
உன் பாசம் எனக்கு புரிகிறதே

நீ கனவில் வரவில்லையா- ஆனால்
என் மனதில் நிற்கின்றாயே.

இனியும் என்னை தண்டிக்காதே
இனியவளே....உன் நலமறிய ஆவல்..
உன் வரவுக்காக காத்திருக்கின்றேன்.
என் மடல் விழி மூடாது......

என்னை கொன்று விட்டு போ


மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து 
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது.. 

காதலும் நீயேன வாழ்வும் நீயென 
வாழ்க்கையை தொலைத்தேன்...

உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன 
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே

உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய் 
காற்றினில் கலக்குதடி காதல் வலி தந்தவளே.. 

என் கண்ணை பாரடி 
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடி

இதயத்தில் பூவாய் மலர்ந்தவளே.. 
ஏனடி என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்.. 

காதலில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவளே.. 
கண்ணீரையும் கனவுகளையும்
காதல் பரிசாக தந்து விட்டு போனாயடி 
காதல் வலி தந்தவளே.. 

காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடி 
என் காதலை விட்டு பிரிந்தாய்..

என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே 
சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ

மறந்தது ஏனோ ?

பத்து மாதங்கள் சுமந்து 
உன்னை ஓர் நாள் 
பெற்ற தாய் 

நடை பழகும் வரை 
தூக்கி வைத்திருந்து 
பின் உன்னை இறக்கி விட்ட 
உன் தந்தை 

கல்வி முடிந்ததும் 
உன்னை அனுப்பிவிட்ட 
கல்லூரி 

வேலை நேரம் 
முடிந்த பின் 
உன்னை தேடாத 
உன் அலுவலக நிர்வாகம் 

சந்திக்காத நேரம் தவிர 
உன்னை பற்றி சிந்திக்காத 
உன் உறவுகளும் நட்பு வட்டமும் 

என தம் கடமை நீங்க 
சதா உன்னை பற்றி 
நினைக்காதவர்களையும் 
மறக்காதவளே ...... 

எப்பொழுதும் உன்னை மட்டுமே 
நினைத்து வாழ்ந்து கொண்டிருந்த 
என்னை மட்டும் நீ 
மறந்தது ஏனோ ......???? 

என்ன செய்வேன்

புதைத்துப் பார்த்தேன்
முளைக்கிறது. 

எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது.

கரைத்துப் பார்த்தேன்
மிதக்கிறது.

சுமந்துப் பார்த்தேன்
கனக்கிறது.

பாவி

என்ன செய்வேன்
உன் ஞாபகங்களை ??

Thursday, 23 September 2010

என் அருகில் நீ இல்லை!

உன்னோடு காலம் முழுவதும்
நான் வாழ்ந்திட நினைத்தேன்...
ஏனோ கால் நிமிடம் கூட
நீ என் அருகில் இல்லை!

உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நினைத்தேன்...
ஏனோ உன் கால்போன சுவடுகூட
கண்ணில் தென்படவில்லை!

உன்னை கண்ணின் மணியாக
காத்திட நினைத்தேன்...
ஏனோ, இமை உதிர்க்கும்
ரோமமாகக் கூட
நீ என்னை கருதிடவில்லை!
உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் நினைத்தேன்...
ஏனோ, ஒரு வழித் துணையாகக் கூட
நீ என்னை அழைத்திடவில்லை!

உன் மதிப்பில்
ஆயிரத்தில் ஒருத்தனாக
நான் உயர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, அந்த ஆயிரத்தில்
ஒருத்தனாகக் கூட
நீ என்னை சேர்த்திடவில்லை!

உன் அரியணையில் அரசனாகவே
வீற்றிருக்க நினைத்திருந்தேன்...
ஏனோ, ஒரு சேவகனாகக் கூட
நீ என்னை அனுமதிக்கவில்லை!

உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறிட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம்
கழுவும், நீராகக் கூட
நீ என்னை பாவிக்கவில்லை!

உன் கழுத்தை
அலங்கரிக்கும் ரோஜாவாக
நான் மலர்ந்திட நினைத்தேன்...
ஏனோ, உன் பாதம் மிதிக்கும்
சருகாகக் கூட
நீ என்னை தீண்டிடவில்லை!

உன் முன் ஒரு சிகரமாகவே ஓங்கி
நிமிர்ந்திட முயன்றேன்...
ஏனோ, சிறு
குன்றாகக் கூட வளராமல்
உதிர்ந்து போனேன்!

ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட நினைத்தேன்...
ஏனோ, ஒரு ஓவியமாகக் கூட
உன் நின் நிலைக்காமல்
கலைந்து போனேன்!

உன் சரித்திர நாயகனாய்
திகழ்ந்திட நான்
வியூகம் வகுத்தேன்...
ஏனோ, ஒரு சொல்லாகக் கூட
ஏட்டில் இடம் பெறாது போனேன்!

உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட நினைத்தேன்...
ஏனோ, உன் நினைவில் கூட
சரியாக நில்லாமல்
நழுவிப் போனேன்!

Friday, 13 August 2010

நிழல் என்பது புரியவில்லை!

கனவுகளை கவிதையாக்க தெரிந்த எனக்கு
நினைவுகளை நிலைபடுத்த தெரியவில்லை!
காண்பவை அனைத்தும் நிஜமென்றிருந்தேன்
நெஞ்சு சுடும் வரை...விழி கலங்கும் வரை...

நிழல் என்பது புரியவில்லை!
இது அறியாமையா??? இல்லை அறியா உண்மையா???
விடை தெரியவில்லை...வினவும் முறை புரியவில்லை
வீழ்ந்தேனா...???வீழ்த்தப்பட்டேனா???

உன் விழி இரண்டும் பல்லாயிரம்
பார்வை கணைகளை தொடுத்து
காயங்களை மட்டும் விட்டுச்சென்றன...
பழியேதும் போடவில்லை...
வலி தாங்காமல் புலம்புகிறேன்.

பார்வையின் பொருள் புரியாமல்
பாவி மனம் பனியாய் உருகியது
மீண்டும் உறைய வைக்க
மனது உருகி ஓடிய பாதை தேடித் திரிகிறேன்.

நட்பென்று கை குலுக்கிக்கொள்ள...
கண்ணீரை மறைத்து கள்ளமாய் சிரிக்க
காலம் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.
உறவு முக்கியம் இல்லை
நான் கொண்ட உணர்வே என் உயிர்...
போதும் இந்த நினைவுகள் மட்டும்.

வாழ்க்கை முழுவதும் நீ கூட வரவில்லை என்றாலும்
நான் வாழும் வரை என்னுள் வாழும்,
உன்னோடு கை கோர்த்து...இதழ் பூத்து...
மண்ணில் மிதந்த அந்த நாட்கள்!!!

உன் காதல்

உன் காதல் எனும் பொய்யான வார்த்தையால்
என் மனதில் இடம் பிடித்தாய்...
ஆனால் உன் இதயத்தில் இன்னும்
அந்த பொய்யே உள்ளது..

காதலை பொய்யென நினைத்தவள் நீ..
என் மனதின் உணர்ச்சிகள்
உனக்கு விளையாட்டு பொருளா??
என் சுவாசத்தின் வலிகள்,
நீ பிடித்து விளையாடும் வண்ணத்து பூச்சியா??

நானும் நீயும் ரோஜா பூவும்,
ரோஜா செடியின் முள்ளும் போன்றவர்கள்..
நான் ஏன் உனை சந்தித்தேன் என்பது
எனது நீங்காத ஏக்கம்….

இன்றும் நான் உன்னை மறக்க நினைக்கிறேன்..
அதை நினைக்கையில் நினைவுகளின் சாரல்
எனை வருடிச்செல்கின்றன…..
அதன் வலியை கூட என்னால் மறக்க இயலும்..

ஆனாலும் உன் பொய்யான வார்த்தை
இன்றுவரையான என் வாழ்க்கையை
நெருஞ்சி முள்ளின் மேல் பயணம் செய்ய வைத்தது...


ஆனாலும் எனக்கு நம்பிக்கையில்லை....
என்னில் உள்ள உன்னை மறப்பேன் என்று....
பொய்யாக என்னுள் கலந்த காதல்
உண்மையாக என் மனதை விட்டு செல்லும் நாளை
எண்ணி வாழ்கிறேன்…..

உன்னால் நொறுங்கிய இதயம் மீண்டும் சேருகையில்
அங்கு நீ இருக்கமாட்டாயா என்று ஏக்கம்
உண்மையான அன்பை எனக்கு தருவாய்
என்ற நம்பிக்கை...

சாவதா? வாழ்வதா?

மழைச்சாரலில் வரும் வானவில்போல் புன்னகைத்தாய்
உன் புன்னகை மழையில் நனைந்தது என் இதயம்...

பௌர்ணமி நிலவுபோல் பார்வை வீசினாய்
உன் பார்வை ஒளியில் மின்னியது என் இதயம்...

அருவியின் ஓசைபோல் வார்த்தைகள் உதிர்த்தாய்
உன் வார்த்தையில் வசியமானது என் இதயம்...

கொடை வள்ளல் போல் அன்பை தந்தாய்
உன் அன்பே தானமாய் பெற்றது என் இதயம்...

பூத்துக்குலுங்கும் நந்தவனம் போல் மகிழ்ச்சி தந்தாய்
உன் மகிழ்ச்சி ஒன்றையே சுவசமாக்கியது என் இதயம்...

கோடைகால இலைபோல் திடீரென உதிர்ந்தாய்
உயிர்போன வலியில் துடிக்கிரதடி என் இதயம்...

என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே
என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்...

உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா?
என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?

Monday, 9 August 2010

நீ!

நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு! இன்று நீ!

உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
இமெயில்களின் அவமதிப்பு,
SMS புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

உன் நினைவுகளே
வாழ்க்கை என்றான பிறகு
நீ தொடுதூரத்தில் இருந்தாலென்ன?
தொலை தூரத்தில் இருந்தால் என்ன ?

குட்டி போடும் என்று நினைத்து
குழந்தைகள் புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல் உன் நினைவுகள்
பத்திரமாய்..

செடி கொடி மரத்தில்
மட்டும்தான் பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!

என்ன எழுதினாலும், உன்னுடைய
“தங்கம்!”
“செல்லம்…”
“மயிலு!”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!

யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது
என்றேன் .....
தங்கமே, நீ அழைக்கும்
தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..

என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...

உன்னிடம் பேச
எவ்வளவு ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .

என்னை கொல்ல
வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

மன்னித்து விடு!
என்னை நீ மறந்தாலும்
நான் உன்னை
மறக்க மறந்துவிட்டேன்….

இத்தனை நாளாய் நீ எங்கிருந்தாய்..?

என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?

Wednesday, 28 July 2010

என்னவளே..(?)

என்னவளே..(?)
இதயம் சுட்டுப் போட்டவளே
எனை தனிமை நெருப்பில் எரித்தவளே
உயிரில் பிரிவுத் தீயை இட்டவளே
கொல்லாமலே எனை கொன்றவளே

காதல் காதலென கைபிடித்தழைத்தவளே
இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே
சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள்
எனை வாழும் பிணமாக்கி வைத்தவளே

வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது
என்னில் நிகழ்ந்த தவறு...
கால சுமையின் கனவுகளை எல்லாம்
நீயாய் சுமந்தது நானே செய்த தவறு

தெரிந்தே உடைக்கும் இதய தச்சன்
நீயே ஆனாயடி, உன் தெருவெல்லாம்
காதல் ஏக்கத் ‘தீ பரவி’ -
எனக்காய் நீ ஏங்கும் நேரம்
நான் இல்லாமலும் போவேனடி

காற்று வெளி மூச்சு பரவி
இதயம் தொட்டாலடி, உன் கால் கொலுசு
சப்தம் ஒரு சேதி சொன்னாலடி,
நீ பார்க்கும் பார்வையில் துளியேனும்
என் தேடலை கொண்டாலடி -
சமாதி உடைத்தேனும் உயிர்ப்பேன்

உனக்காய் மீண்டும் பிறப்பேன்
காதலால் காதலால்
உன்னில் நானாய் நிறைவேனடி!!

எப்படி மறப்பேன்..!!

நீயும் நிலவும் ஒன்று!
நிலவில் நீர் இல்லை
உன்னுள் ஈரம் இல்லை…
உண்மை இல்லை…!

தாலாட்டும் கனவுகளை
தந்துவிட்ட காதலியே...! (?)
பிரிவுத் துயரம் நீக்க..

இறந்துபோகும் வேளையிலும்
மறந்து போகாக் காதலியே...!
“இப்படிபட்ட துரோகத்தை
நீயா....செய்தாய்...?

ஓரு நாள் உனைப் பார்க்காவிடில்
ஓலமிடும் என் நெஞ்சில்
உதிப்பதெல்லாம் உன் நினைவுகள்தானடி....

உனக்காக எல்லாவற்றையும் இழந்தேன்...
நீ என்னையும் இழப்பாய்
என்பது தெரியாமல்!

புதிய உறவுகளின் பிடியில் நின்று
விலகிக் கொள்ளக் நினைக்கிறாயே...!
தனிமையின் அவஸ்தைகளை
தணிப்பதே உன் நினைவுகள் தானடி...

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்!.
ஆனால்… என் உயிர் உன்னோடு இருப்பது
யாருக்குத் தெரியும்?!

உன் விழிகள் பார்த்தால் மொழிகள் தடுமாறும்
என்னையா........? வெறுத்துப் பேசச் சொல்கிறாய்..!
மழை போல நீ... எப்போதாவதுதான் வருகிறாய்!
நிலம் போல் நான்... எப்போதும் காத்திருக்கிறேன்!

மறுத்துப் பேசவே .. மனம் கேட்கவில்லையடி..
மயிலே…!நானெப்படி உனை மறப்பேன்...?
சொன்னால் புரியவில்லை
அனுபவித்தால்தான் தெரிகிறது
காதல் தோல்வியின் வலி!

மலையின் எல்லை அடிவாரத்தில்...
கடலின் எல்லை கடற்கரையில்...
காதலின் எல்லை கல்லறையில்...!

துயிலும் பொழுதும் தூக்கத்தில் அணைக்கும்
உன் காதல் நினைவுகளையா...?
தூக்கி எறியச் சொன்னாய்..!

உன் காலடிச் சுவடுபட்ட மண்ணை சேகரித்து
வைக்கிறேன், அதனால் மட்டுமே
என் கல்லறைச் சுவரை எழுப்பட்டும்…
உன் விழிகளில் தொடங்கிய என் காதல்
உன் பாதங்களிலேயே முடியட்டும்.

Tuesday, 27 July 2010

இதயம்

'நான் மீண்டும் பிறந்தால்
அவளின் இதயமாக பிறக்க வேண்டும்!
அவளுக்காக துடிப்பதற்காக அல்ல!
இந்த முறையாவது அவளுக்கு
இதயம் இருக்கட்டுமே என்று.

நீயே வாழ்கிறாய்

கண்கள் கலங்கினாலும்
கனவுகள் கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிப்பதில்லை
உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயே வாழ்கிறாய்

Wednesday, 21 July 2010

என்னை உனக்கு உணரவைக்கும்

நீ பொய் சொல்கின்றாய் என்று
தெள்ளத் தெளிவாக தெரிந்த போதும்...
சண்டைகள் பிடித்து சச்சரவுகள் செய்து
உனை சங்கடத்தில் ஆழ்த்தாமல்...
தலை சாய்த்து தலை அசைத்து
எதுவுமே தெரியாதது போல்
உன் முன்னே நானிருப்பேன்.

பூப்போன்ற மனதை பொய்யால் கசக்கி
புடுங்கி எறிக்கின்றாய் என்பதை நீ புரியாமல்...
ஏமாளியை இலகுவாய் ஏமாற்றி விட்டேன்
என்ற இறுமாப்புடன் எழுந்து நீ செல்வாய்.

இதயம் கனக்க, இமைகள் நனைய
இதயச் சுமையை தனிமையில் இறக்கி...
மௌனங்களோடு மட்டும் மனம் திறந்து
மனக் காயம் தீர்த்து விட்டு...
உண்மையான நேசத்தோடு மீண்டும் உனைத் தேடி
நானே வருவேன் இது ஏன் தெரியுமா...?
இன்று இல்லாவிடிலும் என்றாவது ஓர் நாள்
உன் மனச்சாட்சி உன்னை தட்டிக் கேட்கும்
என்ற நம்பிக்கையில்!

உனக்காக வாழ்ந்து உனக்கே எனை அர்ப்பணித்து
உன்னையே.. நம்பி இருந்து உனக்காக போராடி
இதயத்திலும் உடலிலும் காயங்களை சுமந்து
உனக்கெனவே.. சுவாசித்துக் கொண்டு
இருந்த என்னை தவிக்க விட்டு
நீ.. துயில் கொள்கின்றாயே..

உலகில் நீ.. சுவாசிப்பது.. ரசிப்பது
வாழ்வது.... காத்திருப்பது... பேசுவது
எல்லாம் எனக்கென இருந்தேன்
இப்பத்தான் புரிந்தது .....
நீ.. எனக்கென இல்லை என்று

இவன் பைத்தியக்காரன்...
உன்னில் பைத்தியமாய் இருந்த பைத்தியக்காரன்
உனக்காக வருந்திய பைத்தியக்காரன்
பல தடவை ஏமாற்றம் என்று தெரிந்தும்
நான் உன் மீது கொண்ட பாசத்தவிப்பில்
உன்னை சுமந்து கொண்டேனே
இவன் பைத்தியக்காரன்தான்.


ஆனால் நீ.. ஏமாற்றும் ஒவ்வொரு
நாளும் கூடிக்கொண்டு செல்வதால்
இனியும் வேண்டாம்.நீ.. தரும் ஏமாற்றமும்
உன் பொய் கொண்ட அன்பும்

இனியும் ஒரு பொய்யுக்குள் வாழ்வதை விட
இந்த பொய் கொண்ட காவியக்காதலுக்கு
இன்றே விடை கொடுத்து மௌனக் கடலில்
மூழ்கிப் போகின்றேன் நான்

இதுவே.. நான் எழுதும் என்இறுதிக் கவிதை உனக்கு
உனக்காக இக்கவி பேனாவில் உள்ள மை எழுதவில்லை
என் கண்களில் இருந்து அருவியாய் கொட்டுகின்ற
கண்ணீர் எழுதுகின்றது...
இதை படிக்காவிட்டாலும் பத்திரப் படுத்திவை
என் மரணத்தின் பின் என்னை உணரவைக்கும் உனக்கு.

மரணம் என்னிடத்தில் மரணிக்கும்.......

தனிமையை உணர்கிறேன்
என்னை சுற்றி எல்லோரும்
இருந்தும்... நீ இல்லையே.....

என் நினைவு தேக்கத்தை - நீ
நிறைத்துவிட்டாய்போல.....
புதிய நிகழ்வுகள் எதுவும்
நினைவில் நிலைப்பதில்லையே......

நான் இழந்ததற்க்கும் இழப்பதற்க்கும்
ஈடு செய்பவள் நீ தானே......
என் உயிரின் உதிரமும் நீ.......
உதிரத்தின் உயிரும் நீ......

கடந்துவந்த பாதைகளில்
மைல்கற்கல் அனைத்திலும் நீ.....
உன்னை நெருங்கியபோதும்
உன்னை விட்டு விலகியபோதும்....

எனக்கான நிமிடங்களின்
எண்ணிக்கை குறைத்து.... அதை
உனக்கான நிமிடமாக உயிர் கொடுத்தேன்.....
உயிர் வாழ உன் நினைவு போதும் என்றால்....
மரணம் என்னிடத்தில் மரணிக்கும்.......

எத்தனை முறை சொன்னார்கள்.....
காதல் பசி அடக்கும்..... ருசி அடக்கும்.....
கவிதைகள் வடிக்கும்....... கனவுகள் படைக்கும்.........
உயிரை கறைக்கும்....
உண்மை என்றேன்...... உன்னை கண்டபின்....

வெறும் வார்த்தைகள் உயிர் வார்க்குமா ?
ஆம் உன்னுடன் பேசிய
சமயங்களில்தான் - நான்
வாழ்ந்திருந்தேன்

இன்று சூழ்நிலை கைதி நான் - உன்
சூழலையும் கெடுத்துவிட்டேன்- நீ
என் காதலை மறுத்திருந்தால்
உன் காலமாவது சிறந்திருக்கும்
நீ விரும்பியபடி வாழ்ந்திருக்கலாம்

உனக்கு வேதனையை தந்தும்கூட - எனை
நீ வெறுத்து பார்க்கவில்லை... Airport - ல்
நான் பிரிந்தபோது துளி விழிநீரோடு
நீ தந்த உதிராத புன்னகை
தினமும் என்னை பிணமாக்கும்......

உன்னை பிரிய சிந்தித்தபோது - நான்
இந்த வேதனையை சந்திக்கவில்லை
பிரிந்தபின்னோ உன்னை தவிர்த்து எதயும்
சிந்திக்க முடியவில்லை....

உண்மையாக உன்னை பிரியவும் மனதில்லை...
உரிமையோடு உன்னுடன் இணையவும் வழியில்லை.....
நீ இல்லா வாழ்வை நினைக்கவும் இயலவில்லை.....

என் மனதில் இருந்து உன் நினைவை
வழுக்கட்டாயமாக நீக்க முயல்கிறேன் - ஆனால்
வலியின் மிச்சங்கள்தான் விழியில் வழிகிறது.....

உன் காலடி பட்டால்தான் - என்
கல்லறை புனிதமாகும்...
என்றாவது ஒரு நாள - என்
இறப்பை நீ உணர்ந்தால்
மாறாத அன்போடு - கொஞ்சம்
மலர்தூவு........ அப்போதுதான்
உன்னை உண்மையாக காதலித்த
என் ஆன்மா சாந்தியடையும்

பொய்யாகச் ஒரு வார்த்தையை சொல்லி விடு

இலையுதிர் காலமும் போய்
இளவேனில் காலம் வந்தும்
நீ மட்டும் இன்னமும்
என்னிடம் வரவில்லை!

என் கடந்த காலத்து
சில்லறைப் பெரு மூச்சுக்களும்
உள்ளத்தின் புலம்பல்களும்
இப்போதும் தொடர்ச்சியாய்...

நீ என்றோ ஒரு நாள் வீசும்
சாமரத் தழுவலுக்காய்
இன்றும் காத்துக் கிடக்கிறது
இந்த ஊமை உள்ளம்!

என் மனது சுமக்கும்
மௌன துயரத்தின் பாரங்களை
இன்றும் முறிந்த சிறகுகளோடு
நான் சுமந்து பறக்கின்றேன்!

என் அன்பே.... மென்மையான
இதயத்தில் ஓர் அழகுச் சிலையாய்
நீதான் நிறைந்திருக்கிறாய் என்பதை
உன் உள்ளம் அறியாததா என்ன...?
இருந்தும் உன் மனமோ
இன்று வரை ஒரு கருங்கல்தான்!

சொல்ல முடியாத சோகங்களையும்
எழுதிட முடியாத குமுறல்களையும்
நான் புதைக்கத் துடிக்க
விம்மி அழுகிறது என் மனது!

ஆசைகள் இல்லாத என் உள்ளத்திலே
உன் ஓசையில்லாத பாசையாலே
அழுத்தி விட்டுப் போன உன்னை
இந்த காதலனின் மனச்சிறையில்
உயிரால் பொத்தி வைத்து
நான் சாகும் வரைக்கும்
உன் சம்மதத்துக்காய்
காத்துத் தவம் கிடப்பேன்!

என் சுவாசமே! நீ என்னை நேசிப்பதாய்
சொல்லாவிடிலும் பரவாயில்லை.
உன் இதயத்தில் எவருமே குடியிருக்கவில்லை
என்று ஒரு வார்த்தையை
எனக்காக பொய்யாகச் சொல்லி விடு!

Friday, 16 July 2010

பொய்யான கனவும் மெய்யான கண்ணீரும்

நிரந்தரமற்ற கனவுகளை நினைவில் சுமந்து வாழ்ந்தேன்
இன்று என் விழிகளில் நீ சுமக்க
வைத்தது கண்ணீரைத் தானே...

பசுமையான என் வாழ்வில் வந்து
பாசத்தைக் காட்டி வேசம் போட்டாய்..
என் பாசங்களை வெறுத்தேன்
பொங்கி வந்த ஆசைகளைப்
பொசுக்கிப் போட்டாய்..

சில நாட்களில் பழகி
தொடர் நாட்களில் விலகி விட்டாய்..
உன் வரவுக்காய்
ஏங்கிய என் விழிகள்-இன்று
உன் கனவுக்காய் ஏங்குகின்றன...

பசியை மறந்தேன்..
படுக்கையை இழந்தேன்
கண் உறங்காமல்
கனவு கண்டேன்
என் கண்ணையே
உன்னிடம் பறி கொடுத்தேன்..
ஆதரவையெல்லாம் இழந்து நின்றேன்

நெருப்பாய் கொதிக்கிறது
எந்தன் நெஞ்சம்..
கண்கள் கண்ட காட்சியும்
பொய்யானது.
தேடிய வாழ்வின் விழியில்
நீர் மெய்யானது...

Thursday, 15 July 2010

!!**பொய்யான உன் வார்த்தைகள்**!!

கனவுக்குள் கலந்தபோதும்
உன் திரு முகம் மறையவில்லை……!
உன்னிடம் பொய் சொல்ல
என் உதடுகள் கூட வெறுக்கின்றன
உண்மையில்லா உன் வார்த்தைகளைக் கேட்டு………….!

உண்மையில்லா உன் வார்த்தைகளால்
என் மனதை குத்துகிறாயே
நான் செய்த பாவம் தான் என்ன………?
உன்னை நேசித்தது பாவமா? இல்லை
உன்னை நம்பியது பாவமா…….?

பொய்யாய் கூட உன்னிடம் நான் பொய் சொன்னதில்லை
என்னிடம் பொய் சொல்ல உன் உதடுகள் கூசவில்லையா………..?
மெளனமாய்க் கூட நான் உன்னை விட்டதில்லை-
இன்று உன் வார்த்தைகளால்
நானே மெளனம் அடைகிறேன்………!

பொய் வார்த்தை என்னும் வில்லால்
என்னை தாக்குகிறாய்…………..!
உடைந்து வீழாமல் என் நெஞ்சம்
பூரித்தா போகுமடி……..?

என் நெஞ்சோரம் சோகத்தை
தந்ததாய் ஓர் நினைவு……!
உன் பொய் வார்த்தையால்
உயிர் போனதாய் ஓர் உணர்வு……..!

அழைக்காமல் வந்து
சோகத்தை தந்தாயே……!
அழுகின்ற விழிகளுக்குள்
அழியாமல் உன் நினைவு மட்டும்……………..!
விழியோரம் துளி நீரும் கரைகின்றது
நீ சொன்ன வார்த்தையை நினைக்கின்றது……….!

காதலுக்கு கண்களே இல்லை!

காதலுக்கு கண்களே இல்லை!
ஆயினும் எத்தனை கண்களை
கரைய வைத்து கண்ணீர் கடிதம் படித்துள்ளது
என்னையும் சேர்த்து!

விண்ணீர்த்துளி மண்ணில்
வீழ்ந்து கரையும் போது "மண்வாசனை"!
என் கண்ணீர்த்துளி மண்ணில்
வீழ்ந்து கரையும் போது "உன் வாசனை"

"ஆசை பிறந்தால் அமுதும் விஷமாகும்!
ஆசை துறந்தால் விஷமும் அமுதாகும்!"
எவனோ கூறியது!

எனக்கு பிறந்த ஆசையெல்லாம் துறந்தேன்!
உன் மீது ஆசை வந்ததும்!
ஒரு வார்த்தை சொல். விஷமே அமுதாக உண்பேனடி!

இத்தனை வரிகளும் உனக்கெப்படி புரியும்!

நீ எனக்கு அறிமுகப்படுத்திய
காதலை, உனக்கு அறிமுகப்படுத்துவதற்காக
இதயத்தை அடகு வைத்து வாங்கிய ரோஜாவுடன்
வந்தேன்!,
அதற்குள்,...... நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!
.....,...............! உன் காதலனை!

உன்னால் அழும் என் கவிகளுக்காகவது
அனுமதி கொடு! கண்ணீராய் வரட்டும்!
உன் கண்களில் இருந்து

புரிந்து கொள்வாய் என் காதலை...

இனியவளே...
நீ சூடிய மலரில்
வண்டுகள் மொய்ப்பதையே
தாங்க முடியாதவன் நான்..
நீ இன்னொருவனுக்கு
இதயத்தையே கொடுத்து விட்டாயடி ..

போதுமடி...
என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட
நம் சித்திரங்கள் சித்தரிக்கும்
நம் சரித்திரத்தை
உண்மை அன்பு மதிக்கப்படும்
நாள் வரும்-அன்று
நீ புரிந்து கொள்வாய்
என் காதலை...

நம் அன்றைய நட்பை கொண்டாட
என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!!
உன் வருகைக்காக....

நீயில்லாத வாழ்வு

அதோ பார் எல்லோரும் நடந்து செல்கிறார்கள்,
நான் மட்டுமே நீயின்றி இறந்து செல்கிறேன்!
உலகம் கைகாட்டிய ஆயிரம் காரணங்களுக்கிடையே நீ
பிரிந்து விட்டாய் -
உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால்
நினைத்து நினைத்துருகி -
நாணற்றுப் போகிறேன் நான்!

உனக்கொன்று தெரியுமா..
உனக்காக நான் சிந்தியக் கண்ணீரெடுத்து
உலகத்தையே நனைத்துவிடலாம்;
உனக்காகக கனக்கும் இதயத்தில்
மலைகனமும் தாங்கிக் கொள்ளலாம்!

உனை உச்சரிக்காத பொழுதுகளை
மரணத்தை நோக்கிய பயணமெனலாம்;
நீயில்லாத வாழ்க்கையை – நான்
இறந்தும் - வாழ விதித்த விதி எனலாம்!

உன்னை காணாத பொழுதை
குருட்டு நகர்வெனலாம்
உனை பிரிந்த தவிப்பை சொல்ல
வார்த்தையின்றி - மௌன சோகம் கொள்ளலாம்!

உன்னிடம் பேசாத ஒரு வார்த்தையை
எனக்குக் கிடைக்காத நிம்மதி எனலாம்
உன்னிடம் பேசி பேசி தீர்த்ததில்
இன்னும் ஏழு ஜென்மம் இருப்பினும் -
உனை நினைத்தே கடந்துப் போகலாம்!

உனை சந்திக்காத நாட்களை
நான் வாங்காத சிரிப்பெனலாம்
நீயின்றி வாழும் நிலையை
என் பாவத்தின் சம்பளமென்று கொள்ளலாம்!
நீ அழைக்காத என் பெயரை
யாரும் அழைக்காத தனிமையிலிருந்து மாய்த்துவிடலாம்

உன் குரல் கேட்டு விழிக்காத பொழுதை
நான் வாழாத நாட்களென்று -
நாளேட்டில் குறித்துக் கொள்ளலாம்!
நீயின்றி நீயின்றி அழும்
அழுகைக்கெல்லாம் எவர் வந்து
என்னை சமாதானம் செய்வார் -

நான் அழுது அழுது ஒழிந்த பின்
வேண்டுமெனில் - உன் நினைவால் பயித்தியமானேனென்பார்!
உன் இதய குருதி கொண்டு
என் நினைவை அழித்துக் கொள் தங்கமே!
நீயில்லாத வாழ்வை -
நானும் வாழப் போவதில்லை
இறந்தேன் என்றே எண்ணிக்கொள் என் செல்லமே!!

நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

குழந்தைகள், அன்பான மனைவி
நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும்
எப்படி மறப்பதோ உன் நினைவை!

இதயம் சுட்டு சுட்டு
வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும்
எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும்
இக்காலம் -

எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா!
உண்மையாக காதலிக்கிறேன்
இரண்டு வீட்டின் நன்மைக்காய்
பிரிந்து இருக்கிறேன் -
பிரிந்திப்படி உயிர்தின்று வாழ
எப்படி சம்மதித்துக் கொண்டேனோ!

உலகமெலாம் சுற்றுகிறேன்
வருடங்கள் பலதை
வயதால் விழுங்கி விட்டேன்
நரை தட்டியும் போகலாம் – உன்
நினைவொழித்த பாடில்லையே!

நீ நடந்து வந்த சப்தம்
எனை அழைத்த ஜாடை
பேசிய விழிகள்
தொட்டுப் பார்த்த உணர்வு
எனக்காய் காத்திருந்த தவிப்பு
பிரிகையில் அழுத அழுகை....
எப்படி மறப்பேன் என் நெஞ்சே…????

வயதறியாத வேகம்
எதையோ தியாகம் செய்வது போன்ற எண்ணம்
வேறு வழி தெரியாத முடிவு
இப்பிரிவின் வலியை -
அன்றறிய சாத்தியமில்லாத தருணம்

இப்படித் தான் கொல்கிறதா உன்னையும்???
எனை உயிராய் சுவாசிக்கும் மனைவி
உனை பற்றி கேட்டு விமர்சிக்கும்
மகளுக்கு சொன்னளவு கூட
உன் மேல் வைத்திருந்த அன்பை -
உன்னிடம் சொல்ல முடியாமல் போனதே

வருட காலமாய் வலிக்கிறது போல்;
பாடல் கேட்க கொள்ளாத பொறுமை
ஒரு படம் பார்க்க ஒதுக்காத நேரம்
சிரித்துப் பேச கூட இல்லாத மனம்
அத்தனைக்கும் காரணம் -
நீயென்று சொல்லி
நான் யாருக்குப் புரிய வைத்து

வேறென்ன நிகழ்ந்துவிடும் இனி??
சோகமாய் அமர்ந்தால்
ஓரிரு வார்த்தையில் -
‘குடும்பம் குழந்தைகள் இருக்கு..,
தாங்கிக்கொள் அவ்வளவு தான்’ – என்று சொல்பவர்களுக்கு

நீயென்பதோ நானென்பதோ
புரியாத ஒற்றை வார்த்தை ‘காதல்’ மட்டுமே!
காதலித்தால் மறுக்கும் சமூகம்
நினைத்து அழுதால் கண்துடைக்க இயலாத மனிதர்கள்
பிரிக்க மட்டும் கொண்டு வரும் நியாயத்தில்

இனியாவது -
திருமணம், குடும்பம் போன்றவற்றை
நம்மை போன்றோரை பார்த்தாவது
அகற்றிக் கொள்ளட்டும்.

அன்றும் இன்றும் மனதை மட்டும் அப்படியே
வைத்துக் கொண்டு வெறும் மனிதர்களை கடந்து
நாட்களை கடந்து
வாழாத பொழுதுகளாய் வெற்றிடம் கொள்கிறதே
வாழ்க்கை.. யார் காரணமாவார்???

இதோ, போகட்டும் பிதற்றல். என
முடித்துக் கொள்கிறேன்,
அழும் மனதோடு உதட்டை விரித்து
சிரித்துக் கொள்கிறேன்,

இன்னும் நூறு வருடம் வாழ
என் சுற்றத்திற்காய் எல்லாவற்றையும்
தாங்கிக் கொள்கிறேன்,
யாரேனும் கேட்டால் நலம் என்றே
சொல்லிவிடுகிறேன்,
நீயும் அப்படியே சொல் நம்பிக் கொள்ளட்டும் உலகம்!!

உண்மையான காதல்

மறப்பதா..? உன்னையா...? நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி இருக்கலாம்

நீர் இன்றி வாழலாம்...
உன் நினைவின்றி வாழமுடியுமா..?
உன்னை என் உயிரைவிட மேலாகக்
காதலிக்கிறேன்.......என் உடம்பில் உயிர்
உள்ளவரை காதலிப்பேன்

உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ பிரியாமாய் பேசியதையும்
நீ பிரியமின்றி பேசியதையும்
எளிதில் மறக்க முடியுமா

உன் நினைவுகளில்
நீந்துவதற்கும், மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான் கற்றுத்தந்தது.

ம்ம்ம்....
எனக்கான உலகமாய் நீயிருக்கிறாய்
உன்னை சுற்றியே என் நினைவிருக்கிறது

உண்மைதான்.....
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைவுகளையும் நினைக்க வைக்கமுடியும்

காரணம் சொல்...

கண்ணீர் துடைத்தவளே - இன்று
கண்ணீர் வரவழைக்கிறாள்...
அன்பைப் பொழிந்தவளே - இன்று
அமைதி காக்கிறாள்...
ஆறுதல் சொன்னவளே - இன்று
அழவும் வைக்கிறாள்...

தூக்கம் கொடுத்தவளே - இன்று
தூக்கம் கெடுக்கிறாள்...
கட்டி அணைத்தவளே - இன்று
எட்டி நிற்கிறாள்...
காதல் சொன்னவளே - இன்று
கரைந்தும் செல்கிறாள்...

பாசம் தான் காட்டினாயா - இல்லை
பாசாங்கு காட்டினாயா...
நேசம் கொண்டாயா - இல்லை
வேஷம் கொண்டாயா...

 "தோள் சாய ஒரு தோழி" - இனி
"தோள் சாய ஒரு தலையணை" ஆனது...


முதலில்,
நன்றாகத்தான் இருந்தது -
தூங்கா இரவுகள் - உன்
நினைவுகளை சுமந்தபடி...

இப்பொழுதும்,
தூங்கா இரவுகள் - உன்
நினைவுகளை சுமந்தபடி -
ஆனால், நன்றாகத்தான் இல்லை...

காதல் சொட்ட சொட்ட
கவிதை எழுதியவனை - இன்று
கண்ணீர் சொட்ட சொட்ட
எழுத வைக்கிறாய்...

காதலிக்காதே என்று சொல்லாதே -
அதற்கு பதிலாய்
கத்தி எடுத்து குத்தி விடு -
அதன் வலியே மேல்...
வார்த்தைகளால் என்னை கிழிக்காதே...

நன்றாகத் தானடி இருந்தாய் -
என்ன ஆயிற்று உனக்கு...
நேற்று இருந்த நீ -
இன்று இல்லை...
என்ன ஆயிற்று...
பதில் சொல்...

கண்கள் குளமாகிறது... - நீ
கண்மூடிச் செல்லாதே...
காரணம் சொல் - ஏனடி?
காரணம் சொல்...

Saturday, 10 July 2010

உன் பிறந்தநாள்……………….

உன் பிறந்தநாள்……………….
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
உன் பிறந்தநாளன்று முதல்ஆளாய் 12 மணிக்கே
வாழ்த்தமுடியவில்லையென வருத்தம்

நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடி.
உன் பிறந்தநாளை மாதம்தோறும்…
இல்லையில்லை, நீ பிறந்தகிழமையென்று
வாரம் தோறும் கொண்டாடுவேன்

தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!

பிறந்தநாளுக்கு
எத்தனை ஆடைகள் நீ எடுத்தாலும்
உன் பிறந்தநாள் ஆடை போல் வருமா?

ஒருமுறைதான் பிறந்தாய் நீ
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!

உன் பிறந்த நாளன்று
உன்னை வாழ்த்துவதா?
நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?

உன் பிறப்பு
உன் தாய்க்குத் தாய்மையையும்,
எனக்கு வாழ்வையும் தந்தது!

நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!

உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென!

என் காதல் தேசத்தில்
உன் பிறந்த நாள்
தேசிய விடுமுறை.

உன் தாய்க்குப் பிறந்தாய்.
என் தாய்க்குப் பின் என் தாயானாய்

என் செல்லமே....
நீ எல்லா சுகமும் பெற்று நீடூழி வாழ
என் வாழ்த்துக்கள்…!!!!

பிரிந்து போனது என் உயிர்

உன் விழிகளில் இனி நானில்லை
இருண்டு போனது என் உலகம்

உன் தேடலில் இனி நானில்லை
சிதைந்து போனது என் பூமி

உன் உச்சரிப்பில் இனி என் பெயரில்லை
மவுனமாகி போனது என் தேசம்

உன் மனதினில் இனி நானில்லை
உடைந்து போனது என் இதயம்

உன் கனவினில் இனி என் நிழலில்லை
தொலைந்து போனது என் இரவு

உன்னில் இனி நானில்லை
பிரிந்து போனது என் உயிர்

என் கண்களின் கண்ணீர்

என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..
எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?

என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....

ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?

கலைந்து போன கனவு

நீ நிலைத்திருக்கும் நிஜம் என்று நினைத்தேன்!
ஆனால் கலைந்து போகும் கனவாகிப் போனாய்....
ஒருமுறை வந்த கனவு என்றும்
மீண்டும் வருவதில்லை!...
ஏனோ நீ மட்டும் அடிக்கடி கண்முன் தோன்றி
மனதை ரணமாக்குகிறாய்!!!

கலைந்து போனது கனவு மட்டும் என்றெண்ணினேன்
வாழ்க்கையும் தான் என்று உணர்த்தியது உன் வார்த்தைகள்!
ஏனடி என் கனவுக்குள் வந்தாய்?
இப்போது ஏனடி கலைந்து போகிறாய்..???

சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம் காதல் கொண்டு
அதில் எரிந்து போகும் விட்டில் பூச்சியாகிப் போனேன் நான்!!!!
ஏழு நாள் வாழும் பட்டாம்பூச்சிக்குக் கூட
அதன் வாழ்க்கையை ரசிக்கும் உரிமையுண்டு!
உன்னோடு ஏழு ஜென்மம் வரை வாழ ஆசைப்பட்ட எனக்கு
சிறகிழந்து தவிக்கும் இந்தத் தண்டனை எதற்காக..........??

உன்னைக் காதலித்த பாவத்திற்காக
காலம் முழுவதும் எனக்கு விதிக்கப் பட்டது
கண்ணீர் மட்டும் தானா????

இதழ்களில் புன்னகை விரியும் போதெல்லாம்
இதயம் ஏனோ வலிக்கிறது!!!

உன் நினைவுகள் என் காயத்திற்கு மருந்தா இல்லை
அமிலமா என்று தெரியவில்லை!
இருந்தாலும் அள்ளி அள்ளிப் பூசிக் கொள்கிறேன்!!!!

எத்தனையோ தடவை சொல்லியும்
புரிந்து கொள்ளாமல் விட்டுச் சென்ற
உன்னை நினைத்து வேதனைப்படுவது
முட்டாள்த் தனம் என்று தெரிகிறது!
ஆனாலும் அந்த முட்டாளத் தனத்தை
செய்யாமல் இருக்க இந்த
முட்டாளுக்குத் தெரியவில்லை!!!!

என் வேதனைகளைக் கொட்டி எழுதிய
கவிதைகளைக் கூட பொத்தி வைக்கிறேன்!
என்றாவது நீ படித்தால் எனக்காகக்
கண்ணீர் சிந்தக் கூடாது என்பதற்காக............

Wednesday, 7 July 2010

துரோகம்

தூக்கம் என் கண்களை தழுவுகிறது , ஆனால்
தூங்கினால் நீ என் கனவில் வருவாயே !
உன்னை கனவில் கூட காணவேண்டாம் என்றுதான் ,
கண்களை மூடாமலே கழிகிறது என் இரவு !
ஆனால் இருளில் கூட என் முன் தோன்றி ,
அழவைக்கிறது உன் கண்களும் அதில் தெரியும் துரோகமும்

என்ன தவறு நான் செய்தேன்

உன்னை என் உயிர் காற்றாக
சுவாசித்தேன் -நீயோ
என் கையில் அடங்க மறுத்த
வெறும் காற்றைப் போல்
என்னை கடந்து சென்றாய்

உனக்குள் ஒளிந்திருந்து நிறம்மாறிய
உன் மனதை நினைத்து
இன்றும் வியக்குகிறேன்

நம் வசந்த காலத்தை முற்றிலும்
இலையுதிர்க்காலமாய் செய்துவிட்டாய்
உன்னில் பத்திரப்படுத்திய
என் நினைவுகளை வெறும் நினைவுச்
சின்னங்களாக மாற்றிவிட்டாய்

என் நிஜங்கள்.. என் கனவுகள்
அனைத்தையும் வெறும் நிழலாக
மாற்றிச்சென்றுவிட்டாய்

நம் நினைவாக நீ எனக்களித்த
தனிமை பரிசுடன் நீ என்னை விட்டு சென்ற
அதே இடத்தில் நான் இன்றும்
நின்றுகொண்டிருக்கிறேன்

என் உயிரினும் மேலாக உன்னை
நினைத்ததை தவிர வேறு என்ன
தவறு நான் செய்தேன்..?

என் உயிரைக் கூட
பிரிந்தாலும் பிரிவேன்
என்றும் உனை நீங்க மட்டும்
மறுப்பேன்- மறப்பேன்

காதல் துரோகம்

விழியில் விழுந்தாய் இதயம் நுழைந்தாய்
ஆனால்…..
உயிரில் கலக்கும் முன் நழுவிச் சென்றாய்…
உனக்கு நான் எனக்கு நீ என்ற வார்த்தைகளை
வாய்மொழியோடு மட்டும் விட்டுச் சென்றாய்…

கண்களில் காந்தத்தை வைத்து
பெண்களை படைத்த இறைவனே!
ஆண்களை மட்டும் ஏன்
தூண்டில் மீன்களாய் படைத்து விட்டாய்!

தேனொழுகும் வார்த்தைகளில்
தேக்கு மர இதயமும்
மெழுகைப் போல் இளகிவிடும்…
கரும்பாய் இனித்திடும் காதல் மொழிகளில்
இரும்பு இதயமும் துரும்பாய் போய்விடும்…

காதலைப் படைத்த இறைவன்
ஓர் கருவியையும் படைத்திருந்தால்
கண்டுபிடித்து விடலாம்
கலப்படமில்லா காதலை…

நினைவை கனவாக்கி நிஜத்தை நிழலாக்கி
சுகத்தை எடுத்துக் கொண்டு
சோகத்தை விட்டுச் சென்றவளே…

நீ செய்த துரோகம் உன் காதலனுக்கல்ல,
புனிதமான காதலுக்கு!

நீ இல்லாத என் நாட்கள்

இமை பொழுது மட்டுமே
உன்னை மறக்க நினைத்தால்
கோடி முறை உதிக்கிறாய் என்னில்

உன்னை பிரிய நினைக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
ஓர் உயிர் பிரியும் வலி என்னில்

உன் ஒரு நொடி மௌனத்தைக் கூட
என்னால் தாங்க முடியவில்லை
இனி நீ இல்லாத என் நாட்களை
எப்படி என் இதயம் தாங்கும்?

உன் தொலைவினில் நான் இருந்தாலும்
என் அருகினில்தான் நீ என்றும்

என் இதயம் வலிக்கிறதே

நிஜமென்று வாழ்ந்த நம் உறவு
இன்று வெறும் கனவாகிக்
கலைந்த போதும்
உன் நினைவுகளை என் மனதில்
நிறைத்தே வைத்திருக்கிறேன்

உன் நினைவுகளை என் மனதினில்
விதைத்து விட்டு மறந்து விடு என்றாய்
நான் எப்படி மறப்பேன் ?

என் திசை எங்கும் தெரிவதெல்லாம்
உந்தன் முகம்தான்
வந்துவிடு என்று சொல்லிவிட்டு
உன் மனக் கதவை பூட்டிக் கொண்டாய்

நாம் மகிழ்ந்து பேசிய நம் நிமிடங்களை
பறித்து சென்றாய்
எனக்குள் கனவுகள் அனைத்தையும்
வளர்த்து விட்டு எனை ஏன் மறந்தாய்?

உன் உயிரை என்னிடம் தந்துவிட்டு
ஏன் என் பிரிவை கேட்டாய்?
நான் என்ன சொல்வேன்... என்ன செய்வேன்?
என் இதயம் வலிக்கிறதே..!!!

பிரிந்து போனது என் உயிர்

உன் விழிகளில் இனி நானில்லை
இருண்டு போனது என் உலகம்

உன் தேடலில் இனி நானில்லை
சிதைந்து போனது என் பூமி

உன் உச்சரிப்பில் இனி என் பெயரில்லை
மவுனமாகி போனது என் தேசம்

உன் மனதினில் இனி நானில்லை
உடைந்து போனது என் இதயம்

உன் கனவினில் இனி என் நிழலில்லை
தொலைந்து போனது என் இரவு

உன்னில் இனி நானில்லை
பிரிந்து போனது என் உயிர்

என் மனதின் வலி

உன்னை என் மனதில்
மறைத்து வைத்திருந்தேன்
நீயோ – என் மனதை
சிதைத்து வெளியேறி விட்டாய்

என் இதயத்தை மட்டுமே சுமந்த
உன் மனம் எப்படி இன்னொரு
இதயத்தை சுமக்க முன்வந்தது?

உன் மனதின் இந்த கொடூரத்தை
என்னால் தாங்க முடியவில்லையே
என் மனதின் வலியை நீ
உணரவேயில்லை

நொடிக்கொருமுறை உன் நினைவுகளால்
என் நினைவை இழந்து வருகிறேன்
என்னால் எப்படி உன்னை
மறக்க முடியும்?

இறைவா என் எதிரிக்கும்
வேண்டாம் இப்படி ஒரு வேதனை..!!!

என் தவிப்புகள்

இன்றும் என் காதோரம்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
இறுதியாக என்னுடன் –
நீ பேசிய அந்த கனத்த மவுனம்

பேச வார்த்தைகள் இருந்தும்
பேசமுடியாமல் பிரிந்து சென்றாயே!
என் நினைவில் மறக்க முடியாமல்
பதிந்து விட்டாய்

உன்னில் தொலைந்த நம் நினைவுகள்
இன்றும் என்னுள் கரைபுரண்டோடுகிறது
என்னுயிரில் இருந்துகொண்டே
உன்னை மாற்றினாய் என்னை ஏமாற்றினாய்

நம் நினைவுகள் அனைத்தையும்
கவிதைகளாக வரைகிறேன்
கண்ணீரில் மிதக்கிறேன்

உன்னை மறக்க முடியாமல்
தேடும் என் மனதோடு
உன் நினைவில் உயிர் தவிக்கிறேன்
என் தவிப்புகள் உனக்குபுரியாமல் போனது
என் துயரமே…!!!

இறந்து கொண்டு இருக்கிறேன்

இன்றும் என் நினைவாய்
என்னிடம் நீயேதான் நிறைந்திருக்கிறாய்!
உன்னை மட்டும்தானே நேசித்தேன்
உன் அன்பில்தானே என் சுயத்தை இழந்தேன்

இருந்தும் என்னை தவிக்க விட்டு
உன்னை மட்டும் பிரித்து சென்று விட்டாயே!
மறக்க முடியவில்லை
உன்னை மறக்கவும் முயல்வதில்லை

பிரிவின் கொடுமையை
நீ பிரிந்தபோது புரிந்துகொண்டேன்
மரண நிமிடங்களின் வலியை
என் தனிமையில் உணர்ந்து கொண்டேன்

உன்னை நினைக்கும்
என் ஒவ்வொரு நொடியிலும்
நான் இருந்தும் இறந்து கொண்டு இருக்கிறேன்

யார் தவறு..?

இறப்போம் என்று தெரியாமல்
பிறந்துவிட்டோம்-
அது நம் தவறல்ல
இறந்திடுவோம் என்று தெரிந்தும்
பெற்றுவிட்டார்கள் அது
அவர்களின் தவறும் இல்லை

அதுபோல்தான்....
நீ மறுப்பாய் என்று தெரியாமல்
காதலித்துவிட்டேன்-
அது உன் தவறல்ல
நீ மறுக்கிறாய் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் -இதில்
என் தவறும் இல்லை
எல்லாம் காதலின் தவறு மட்டுமே?

காதல் சின்னம்…

அன்பே…
எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில் அமர்ந்து அழு….
உன்னால் நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில் முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
என் காதலின் சின்னமாக…..

நீ இல்லாத உலகத்தில்

நீ இல்லாமல் வாழத்தெரியாத நான்
நீ இருந்தும் இல்லாமல் எப்படி வாழ்வேன்.
சொல் கண்ணே சொல்

நீ இல்லாத உலகத்தில் நான் பிணமாய்
வாழ்வதைவிட நீ இருக்கும் உலகில்
நான் கல்லறையாய் வாழலாம்.

உனக்கான என் காதல் மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும் மழையாலும்
உன் நினைவெனும் புயலாலும்.

நீ என்னை வாழ வைக்க வேண்டாம்
வாழ விடாமல் வைத்துவிடு அது போதும்

உனக்காய் வாழ்ந்து உன்னால் இறந்தேன்
என்பதே என் வாக்குமுலமாய் இருகட்டும்......
வா அன்பே வா

இப்படி உருமாருகிறாய்

சந்தித்தாய்... சாய்ந்தாய்... சிரித்தாய் ....
அழைத்தாய்... அன்பு கொடுத்தாய்
அலட்சியம் செய்தாய் ...

பழகினாய்... பரவசமடைந்தாய்
பதற செய்தாய்... உதவினாய்.....
உயர்த்தினாய்… உதாசினப்படுத்தினாய் ....
கண்களால் காதலாய் காயப்படுத்தினாய் ...

ராமனாக என்னை நினைதேன் - நீயோ
ராவணனை ராமனாக்கி
என்னை அனுமனாக்கினாயோ....

தேXXயாளே...

உன் தாயின் முலைகள்
உனக்கு உணவளித்ததா
இல்லை நஞ்சூட்டியதா
இப்படி உருமாருகிறாய்...
தயவு செய்து தாய்மை அடையாதே
தாயாவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் ...!

போதுமடி

போதுமடி


இனியவளே...
நீ சூடிய மலரில்
வண்டுகள் மொய்ப்பதையே
தாங்க முடியாதவன் நான்..
நீ இன்னொருவனுக்கு
இதயத்தையே கொடுத்து விட்டாயடி ..

போதுமடி...

என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட
நம் சித்திரங்கள் சித்தரிக்கும்
நம் சரித்திரத்தை
உண்மை அன்பு மதிக்கப்படும்
நாள் வரும்-அன்று
நீ புரிந்து கொள்வாய்
என் காதலை...

நம் அன்றைய நட்பை கொண்டாட
என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!!
உன் வருகைக்காக.... !

கண்ணீர்

என் இதயத்தை அறுத்துப்பார்

கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்
சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்
ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே
நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே
இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்
அப்போதாவது
நீ என்னைக் உண்மையாகக் காதலி.

இதய வாசல் திறப்பாயா

என்னவளே ஏன் என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன் என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும் நீ வாழ்கவென
வாழ்த்திட என் உதடுகள் அசைந்தாலும்
உள்ளம் ஊமையாய் தினமும் அழுகிறதே

உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே
உறக்கம் மறந்து போனதே

இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா

ப்ரியமானவனே,

உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை….

பிரியமான தோழியாக வந்த உன்னை- இன்று
என் கண்கள் எதோ ஒரு எதிர்பார்ப்போடு பார்க்கின்றன

காரணம் கேட்காதே, எனக்கே தெரியவில்லை ஏன் என்று..
என்னை நினைத்து நானே பயம் கொள்கிறேன்
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாய் உணர்கிறேன்

வாழ்க்கை என்றால் இத்தனை விசித்திரமானதும்,
வேடிக்கையானதும்- என்று
உன்னோடு பழகிய பின்புதான் உணர்கிறேன்,

எனை ஏன் இப்படி மாற்றிவிட்டாய்?
நான் செய்த தவறுதான் என்ன?
உன்னை நேசித்தது ஏன் தவறா?
உன்னை நெருங்கி வந்தது என் தவறா?

கள்ளியே, உன்னை நான் பிரியவில்லை,
ஆனால் விலகிச்செல்கிறேன்
உன்னை காயபடுத்தவில்லை,
ஆனால் காலங்களை கடக்க வழி தேடுகிறேன்.

கேள்விகள் கேட்காதே.
காரணம்,, இப்போது நானே ஒரு
கேள்விக்குறியாகத்தான் இருக்கிறேன்

கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தால்
தோழியாக வந்து தலை கோதுகிறாய்
மறுபக்கம் ?????? வந்து மார்போடு அணைக்கிறாய்,
தவிக்கிறேன் நான்,

உணர்விற்கும், உறவுக்கும் மத்தியில் நின்று
மறுபடியும் சொல்கிறேன்
உன்னை மறக்கவில்லை நான்
உன்னோடு பேசிப்பழகிய நாட்கள்
இன்றும் என்னுள் நீங்கா நினைவுகளாக.......

நகர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன..
இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நானும் ..................

ஏன் பிரிந்தாய்